வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை – சீனாவின் ‘சங்கப் பாடல்கள்’ [பயணி தரன்]

₹250.00

“இவற்றைப் படிக்காதவர் சுவரைப் பார்த்துத் திரும்பி நிற்பவருக்குச் சமம்” — கன்ஃபூசியஸ் மூன்று ஆயிரம் ஆண்டுகால மனித உணர்வுகளையும் இயற்கையின் அமைதியையும் பேசும் சீனச் செவ்வியல் கவிதைகளின் தமிழ் வடிவம். சீனத்துக்கும் தமிழுக்கும் இடையிலான நேரடி மொழியாக்கத்தில் உருவான முதல் புத்தகம்!

Category: ,

Description

“இவற்றைப் படிக்காதவர் சுவரைப் பார்த்துத் திரும்பி நிற்பவருக்குச் சமம்” — கன்ஃபூசியஸ்

மூன்று ஆயிரம் ஆண்டுகால மனித உணர்வுகளையும் இயற்கையின் அமைதியையும் பேசும் சீனச் செவ்வியல் கவிதைகளின் தமிழ் வடிவம். சீனத்துக்கும் தமிழுக்கும் இடையிலான நேரடி மொழியாக்கத்தில் உருவான முதல் புத்தகம்!

அன்பு, பிரிவு, அதிகாரத்தின் வீழ்ச்சி, இயற்கையின் பேரமைதி, அற்றைக்கால எளிய மக்களின் அன்றாட வாழ்வு—காலங்கள் மாறினாலும் மனித மனம் மாறவே இல்லை என்பதை உணர்த்துகின்றன இந்தப் பழமையான சீனக் கவிதைகள்.

சீனப் பண்பாட்டின் அடித்தளமாக விளங்கும் ‘ஷிழ் சிங்’ (Shi Jing) எனும் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கவிதைகள், வாசிப்பில் உங்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும்.

ஏன் இந்நூலை வாசிக்க வேண்டும்?

  • கன்ஃபூசியஸின் பரிந்துரை: மனித மனத்தைப் புரிந்து கொள்ளவும், சமூகத்தை அறியவும் இக்கவிதைகள் அத்தியாவசியமானவை என்று தத்துவஞானி கன்ஃபூசியஸ் குறிப்பிடுகிறார்.

  • எளிய, சுவாரஸ்யமான தமிழ்: மூலக்கவிதைகளின் ஆன்மா மாறாமல், நவீனத் தமிழில் கவிதைகளின் அழகியலை நேர்த்தியாகக் கொண்டுவந்துள்ளார் பயணி தரன்.

  • சுவாரஸ்யமான அறிமுகக் கட்டுரைகள்: சீன இலக்கியத்தின் ஆழமான புரிதலை, இந்தப் புத்தகத்தின் வரலாற்றை, மொழியாக்கத்தின் நுணுக்கங்களை எளிமையாக எடுத்துச் சொல்லும் கட்டுரைகள்.

கவிதையை விரும்புபவர்களுக்கும், உலக இலக்கியத்தை அறிய விரும்புபவர்களுக்கும் ஒரு பொக்கிஷம்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை – சீனாவின் ‘சங்கப் பாடல்கள்’ [பயணி தரன்]”

Your email address will not be published. Required fields are marked *